Monday, June 17, 2013

சொல்லால் என்னால் வர்ணிக்க 
வார்த்தையேதுமில்லை 
ஒரு வித விந்தையான 
வலி மனதெல்லாம்..........


மனம் வலிக்கின்றது - ஏன் 
புரியவில்லை..............

அம்மாவின் பிரிவா?

தனிமையா?

எதிர்கால நினைப்பா?

என்னவென்று புரியவில்லை ...........................

புதிர்களுள்ளது மனிதவாழ்க்கை - இதை
புரிந்து கொள்ள மறுப்பது
மனித மனம்.........

Sunday, July 18, 2010

"அம்மா"

அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை சொல் என்றாள் என் அன்னை!.

"அம்மா" என்றேன்!உடனே! இன்னும் சின்னதாய் சொல் என்றாள்!

"நீ" என்று அவளை காட்டினேன்.

ஆக்கம்-க.தி .வளவன்....

Sunday, July 11, 2010

அம்மா!

அம்மா! அபூர்வமான இறைவனின் அன்பளிப்பு!
அம்மா! தன்னை இருட்டாக்கி எம்மை ஒளிரச்செய்தவள்!
அம்மா! உனது மறு பெயர் அன்பு, பாசம், கருணை!
அம்மா! தனது இரத்தத்தை பாலாக்கியவள்!
அம்மா! பல இரவை எமக்காக தொலைத்தவள்!
அம்மா! நடக்க,பேச கற்பித்த முதல் குரு!
அம்மா! அன்றும் இன்றும் என்றும் அன்பு காட்டுபவள்!
அம்மா! உனது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

ஆக்கம்-க.தி .வளவன்....

அபூர்வ படைப்பு -அம்மா

அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
அன்பு மாறாத,
தொல்லை தராத,
இரவு பகல் எமக்காக கனாக்காணும்
இறைவனின் ஒரே ஒரு அபூர்வ
படைப்பு -அம்மா
ஆக்கம்-க.தி .வளவன்....

தனிமை!!!

தனிமையை வெறுத்வன் நான்!

இன்றோ அதை ரசிக்கிறேன்.

என் தனிமையை கவிதையாய்

மாற்றியது தனிமையோ?

ஆக்கம்-க.தி .வளவன்....

Thursday, July 8, 2010

அம்மா

முதல் பார்த்த முகம் உன்முகம்,

முதல் கேட்ட பேச்சு உன் பேச்சு,

முதல் சொன்ன சொல் அம்மா,

முதல் உண்ட உணவு தாய்ப்பால்,

முதல் கிடைத்த முத்தம் உன் முத்தம்,

முதல் கிடைத்த அன்பு உன் அன்பு,

முதல் பிடித்த கை உன்கை,

எதிலும் முதல்!! என்றும் முதல்!! எங்கும் முதல்!!

ஆக்கம்-க.தி .வளவன்

Wednesday, July 7, 2010

அம்மா

நான் பிறக்கும் முன் வந்த சொந்தம் --நீ அம்மா

நான் இறந்தாலும், மாறாத தாய் பந்தம் -நீ அம்மா

ஆக்கம்-க.தி .வளவன்