தமிழ் இலக்கியம்

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருட்சேத்திர தர்ம யுத்தம் நடக்கும் போது ஸ்ரீ பகவான் கண்ணனின் திருவாயினால் மலர்ந்தது பகவத்கீதை.

அர்ஜூனன் எதிர் அணியில் உள்ள தனது உற்றார், உறவினர்களைக் கண்டு போர்புரிய மாட்டேன் என தனது காண்டீபத்தினை கீழே எரிந்தான். எப்போது அவனது மனக்கலக்கத்தினை போக்கும் பொருட்டு கண்ணன் கீதையை அவனுக்கு உபதேசித்தார்.

கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினைக் குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள். இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்கியாணம் எழுதியுள்ளனர்.

முதல் அத்தியாயம்(அர்ஜுந விஷாத யோகம்)
இரண்டாவது அத்தியாயம்(ஸாங்க்ய யோகம்)
மூன்றாவது அத்தியாயம்(கர்ம யோகம்
நான்காவது அத்தியாயம்(ஞானகர்மஸந்யாஸ யோகம்)
ஐந்தாவது அத்தியாயம்(கர்மஸந்யாஸ யோகம்)
ஆறாவது அத்தியாயம்(ஆத்மஸம்யம யோகம்)
ஏழாவது அத்தியாயம்(ஞாநவிஜ்ஞாந யோகம்)
எட்டாவது அத்தியாயம்(அக்ஷரப்ரஹ்ம யோகம்)
ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்)
பத்தாவது அத்தியாயம்(விபூதி யோகம்)
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்)
பன்னிரண்டாவது அத்தியாயம்(பக்தி யோகம்)
பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்)
பதினான்காவது அத்தியாயம(குணத்ரயவிபாக யோகம்)
பதினைந்தாவது அத்தியாயம்(புருஷோத்தம யோகம்)
பதினாறாவது அத்தியாயம்(தைவாஸுரஸம்பத்விபாக யோகம்)
பதினேழாவது அத்தியாயம்(ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்)
பதினெட்டாவது அத்தியாயம்(மோக்ஷஸம்ந்யாஸ யோகம்)

'கீதையின்-சாரம்’தொகுப்பு

திருக்குறள்
⡪ø¡Á‹ å¿èˆî‚è õ£›‚¬è ªïPè¬÷ â™ô£ Þùˆîõ˜‚°‹ â‚è£ôˆFŸ°‹ ªð£¼‰¶‹ õ¬èJ™ ‘F¼‚°øœ’ â¡ø æ˜ àôèŠ ªð£¶ ËL¬ù ð¬ìˆ¶ àôè °¼ â¡Á ܬùõ󣽋 «ð£ŸøŠð´‹ ªð¼¬ñ I‚èõ˜ ÜŒò¡ F¼õœÀõ˜. ñè£èM ð£óFò£˜ îù¶ ð£ìL™. .

“õœÀõ¡ ù àôA‚«è 
õ£¡ ¹è› ªè£‡ì îI›ï£´”

âùŠ ªð¼¬ñ»ì¡ °PŠH´A¡ø£˜.
Üø‹, ªð£¼œ, Þ¡ð‹ ÝAò Í¡Á HK¾èO¡ W› 1330 °ø†ð£‚è¬÷ 133 ÜFè£óƒèO™ ÞòŸPòõ˜. 

Üøˆ¶Šð£L™ Þ™ôøMò™, ¶øõøMò™, á›Þò™ â¡ø  HKM½‹, ªð£¼†ð£L™ ÜóCò™, ܃èMò™, âNLò™ â¡ø HKM½‹, è£ñˆ¶Šð£L™ èôMò™, èŸHò™ â¡ø HKM½‹ °ø†ð£‚è¬÷ ÞòŸPòõ˜.
îIö˜ ï£èK般î M÷‚°õ«î F¼‚°øœ; F¼‚°œ Ãøõù«õ îIö˜ ð‡¹; îIö˜ èô£„ê£ó‹; îIö˜ êñò‹; îIö¼‚° õN 裆´õù.  ܈î¬èò 効‹ àõ¬ñ»‹ ÜŸø àò˜‰î ˬô Þš¬õòèˆFŸ° ߉î ÜŒò¡ F¼õœÀõ¼‚° ªê¡¬ùJ™ õœÀõ˜ «è£†ìº‹, °ñK‚èìL™ 133 Ü® àòó„ C¬ô»‹ ܬñ‚èŠð†´œ÷¶.

திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.


திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.

பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்


அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும்.

இந்த பகுதியில் உலகப் பொதுமறையான திருக்குறள் பொருளுரையுடன் வழங்கப்பட்டுள்ளது

Tamil Valluvam