சொற்பொழிவுகள்

கவிஞர் கண்ணதாசன்



வார்த்தைகளுக்குள் வசப்படாத வாழ்க்கை கவிஞர் கண்ணதாசனுடையது.

சிறுகூடல்பட்டியில் 24 - 6 - 1927 ல் பிறந்த கண்ணதாசன் எட்டாவது வரை படித்திருக்கிறார்.

கண்ணதாசன் திரைஉலகில் பாடலாசிரியராக நுழைந்தார் ,வருடம் 1949, முதற் பாடல் கலங்காதிரு மனமே இடம் பெற்ற படம் 'கன்னியின் காதலி'.பின் வசனகர்த்தா,கதாசிரியர் ,மற்றும் சினிமா தாயாரிப்பாளராக கூட கண்ணதாசன் வலம் வந்தாலும்,மக்கள் மனதில் பாடலாசிரியர் கண்ணதாசனே சிம்மாசனம் போட்டமர்ந்திருந்தார்.

இந்தியாவை சீனா அறுபதாவதுகளின் தொடக்கத்தில் ஆக்கிரமித்தது.இதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் 'இரத்தத் திலகம்' என்ற படமெடுத்தார்.இரத்தத் திலகத்தில் சீனப் படைகள் வைத்திருக்கும் கொடிக்கு பதிலாக சோவியத்தின் கொடியை தவறுதலாக பயன்படுத்தப்பட்டிருந்தது.இதை கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டிக் காட்டியவுடன் ஓடிக்கொண்டிருந்த படத்திலிருந்து அக்காட்சியை கண்ணதாசன் நீக்கினார்.அந்த காலத்தில் இது சிரமமான விஷயம்.

திருமகள் (1944), திரைஒலி (1945&1946),தென்றல் கிழமை இதழ்,சண்டமாருதம்(1954),தென்றல் நாளிதழ் (1961),கண்ணதாசன் மாத இதழ் ,கடிதம் நாளிதழ் ஆகிய பத்திரிக்கைகளில் கண்ணதாசன் இயங்கினார்.வியாபார ரீதியில் பெரும் வெற்றி பெறாவிடிலும் பத்திரிக்கை துறைக்கு கண்ணதாசனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அனுசரித்து போகாத,உள்ளதை உள்ளபடி கூறும் குணத்தால் கவிஞரது அரசியல் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையவில்லை. தி.மு.கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராக தனது பயணத்தை தொடங்கியவர் 1957ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.பின் திமுகவிலிருந்து விலகி (1960) சம்பத் தலைமையில் உருவாகிய தமிழ்த் தேசிய கட்சியில் இணைந்தார்.பின்னர் தமிழ்த் தேசிய கட்சி கங்கிரஸில் இணையும் போது (1963)தானும் இணைந்தார் .அகில இந்திய காங்கிரஸின் செயற்குழு உறுப்பினராகவும் (1964 - 66)இருந்திருக்கிறார்.

மத்திய ,மாநில அரசுகளால் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற கண்ணதாசன் தனது சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடமி பரிசு (1979) பெற்றார்.சிறந்த கவிஞருக்கான அண்ணாமலை நினைவுப் பரிசும் பெற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் பதவியளித்து சிறப்பித்தார்.

சிகாகோ நகர் மருத்துவமனையில் 17 - 10 - 81 அன்று மறைந்தாலும் ,மக்கள் மனங்களில் நீங்காது வாழும் சனங்களின் கவிஞர் கண்ணதாசன்.


கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 1



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 2



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 3



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 4



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 5



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 6



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 7



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 8



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 9



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 10



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 11



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 12



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 13



கவிஞர் கண்ணதாசன் சொற்பொழிவு 14



சொல்வேந்தர் சுகி சிவம்


அண்ணாமலையார் பகுதி - 1



அண்ணாமலையார் பகுதி - 2



விநாயகர் விளக்கம்



விநாயகர் பெருமை



கண்ணன் ஜகத் குரு

பகுதி 1:


பகுதி 2:


விஞ்ஞானமும் மெஞ்ஞானமும்

பூட்டப்பட்டுள்ள அா்த்த முடிச்சுக்களை தன் அழகு தமிழால் அவிழ்க்கிறார் சொல்வேந்தா் சுகி சிவம் அவா்கள்.

பகுதி 1:



பகுதி 2:


பகுதி 3:


பகுதி 4:


More சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவுகள்

Siva Siva


சாமி சரணம் பகுதி - 1
சாமி சரணம் பகுதி - 2

பாரதியின் பயணங்கள் முடிவதில்லை

உன்னையறிந்தால் - பகுதி 1
உன்னையறிந்தால் - பகுதி 1

வாழும் கலை - பகுதி 1

வடலுர் வள்ளல் - பகுதி 1
வடலுர் வள்ளல் - பகுதி 1

நல்ல குடும்பம்

திருவாசகத்தேன்

புலவா் கீரன்


திருவிளையாடல் புராணம்

இறைவனின் விளையாடல்களை தொகுத்துக் கூறுவது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் குறித்து புலவா் கீரன் அவா்கள் ஆற்றும் சொற்பொழிவைக் கீழ் இணைக்கிறேன்.

பகுதி 1



பகுதி 2







பரதன்


பகுதி 1



பகுதி 2




சுதா சேஷய்யன்


சுதா சேஷய்யன் அவர்கள் ஆழ்வார்கள் பற்றி ஆற்றிய சொற்பொழிவு.சுதா சேஷய்யன் ஒரு MBBS வைத்தியா்

ஆழ்வார்கள்

பகுதி 1:



பகுதி 2 :



பகுதி 3 :



அண்ணா


இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா


இஸ்லாம் மதம் பற்றி அண்ணா, தனது கருத்துகளை எடுத்து வைத்த பேச்சு இது. மதங்களைப் பற்றி அலசுவதிலும் அண்ணா எல்லாருக்கும் அண்ணா என்பதை நிரூபிக்கும் உரை இது.



Thanks and Sources :

Siva Siva

தமிழ்தேசம்

பஞ்சாமிர்தம்

Tamil Nanbargal